கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.
பதில்:
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.
1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.
அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் - அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி - அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் - தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை - மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.
2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் - வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்களிடம் - வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே - அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் - நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு - தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.
3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் - எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி - அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் - சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.
4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.
மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் - அரபி மொழி அல்லாதவர்களும் - அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி - பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் - ஸேர் - பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் - அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு - அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.

தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் 'குர்ஆன்' என்ற வார்த்தைக்கு 'ஓதுதல்' என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.
6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:
அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:
'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.' (அல்-குர்ஆன் 15 : 9)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி எண்: 2
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?
பதில்:
இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.
1. அருள்மறை குர்ஆனின் வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.
'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.
2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:
'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)
மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.
3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:
அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!
அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.
5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:
இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.
6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 9:6)
அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.
இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கேள்வி எண்: 3
குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் 'நாம்' அல்லது 'நாங்கள்' என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.
பதில்:
இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்தப்படுகிறது. அவ்வாறு 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்துவதால் இஸ்லாம் பல தெய்வக் கொள்கையை உடையது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதமாகும்.
இரண்டு விதமான பன்மைகள்
ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன. ஒன்று -எண்ணிக்கையில் அல்லது அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில் அதனை பன்மை என்பதும், ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய 'மரியாதைப் பன்மை' என்றும் இரண்டு வகையான பன்மைகள் உள்ளன
அ. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் - இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'I-ஐ' என்று குறிப்பிடாமல் 'we-வீ' என்று குறிப்பிடுவார். இதற்கு 'மரியாதைப் பன்மை' (Royal Plural) என்று பெயர்.
ஆ. இறந்து போன இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹிந்தியில் பேசும் பொழுதெல்லாம் 'ஹம் தேக்னா சாத்தா ஹை' - நாம் பார்க்க விரும்புகிறோம்' என்று உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கும் 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தைக்கு 'நாம்' என்ற பொருளாகும். 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தையை - ஹிந்தி மொழியில் உள்ள மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இ. அது போலவே அல்லாஹ், தன்னைப் பற்றி அருள்மறையில் குறிப்பிடும் பொழுது 'நஹ்னு' (நாம் அல்லது நாங்கள் என்ற பொருள்) என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப் பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை.
ஏகத்துவம் அல்லது ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்று. அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனது தன்மைகள் தனித்தவை. தனித்தன்மை வாய்ந்தவை என்கிற வசனங்கள் அருள்மறை குர்ஆனில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் நூற்றுப் பன்னிரெண்டு ஸுரத்துல் இக்லாஸின் முதல் வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.
'(நபியே!) நீர் கூறுவீராக!. அல்லாஹ் - அவன் ஒருவனே.!'(அல்குர்ஆன் 112:1)
மேற்கண்ட அருள்மறையின் வசனத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கம் ஓரிறைக் கொள்கைக்கு உரிய மார்க்கம் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி எண்: 4
இஸ்லாமியர்கள் 'விட்டொழிக்கும் விதி' யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவில்லையா?.
பதில்:
வித்தியாசமான இரண்டு பொருள் கொள்ளல்:
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:
'ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?.' (அல் குர்ஆன் 2 : 106)
மேற்படி வசனத்திற்கு அணிசேர்க்கும் வகையில் அருள்மறையின் பதினாறாவது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் 101 வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.
'(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால் (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்' என்று அவர்கள் கூறுகிறார்கள். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டு;மென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்கள்.' (அல்குர்ஆன் 16 : 101)
மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் 'ஆயத்' என்கிற அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. மேற்படி 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு 'இறைவனின் அத்தாட்சிகள்' என்றும் 'இறைவசனங்கள்' என்றும் 'இறை வேதங்கள்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
அருள்மறையின் இரண்டாம் அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106 வது வசனத்திற்கு நாம் இரு விதங்களில் பொருள் கொள்ளலாம்.
மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு இறைவேதங்கள் என்று பொருள் கொண்டால் அருள்மறை குர்ஆன் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்பிருந்த வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் வேதங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது, குர்ஆனுக்கு முந்தைய வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் போன்ற வேதங்கள் மறக்கப்பட வேண்டும் என்றும் பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக அவைகளுக்குச் சமமான அல்லது அவைகளைவிடச் சிறந்த வேதமான குர்ஆனை அருளியிருக்கிறான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு இறை வசனங்கள் என்று பொருள் பொருள் கொண்டால், மேற்படி வசனங்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் - வேதங்களில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. மேலும் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் எதுவும் அல்லாஹ்வால் வழக்கிலிருந்து விட்டொழிக்கப்பட்டு விட்டதாக கருதக் கூடாது. மாறாக மேற்படி வசனங்களுக்கு சமமாக அல்லது மேற்படி வசனங்களை விடச் சிறந்த வசனங்களை அருளியிருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். முன்னர் இறக்கப்பட்ட வசனங்களுக்கு சமமாக அல்லது அதைவிட சிறந்த வசனம் பின்னர் இறக்கியருளப்பட்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களிலும், முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்களிலும் பலபேர் மேற்படி வசனங்களுக்கு பொருள் கொள்ளும் போது, ஒரு விஷயத்தைப் பற்றி புதிய வசனங்கள் இறக்கப்படும் போது அந்த விஷயம் சம்பந்தமாக முன்னால் இறக்கப்பட்ட வசனங்கள் வழக்கிலிருந்து விட்டொழிக்கப் படவேண்டும் என தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். முந்தைய வசனங்கள் இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது என்றும், பழைய வசனங்களுக்குச் சமமாக அல்லது, இன்னும் சிறப்பிற்குரிய புதிய வசனங்கள் இறக்கியருளப்பட்டதால் முந்தைய வசனங்களை வழக்கிலிருந்து விட்டு விட வேண்டும் என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் முந்தைய வசனங்கள் - புதிதாக இறக்கியருளப்பட்ட வசனங்களோடு முரண்படுகின்றது என்கிற தவறான கருத்தையும் கொண்டுள்ளனர். இவ்வாறு இறக்கியருளப்பட்ட வசனங்களை சிலவற்றை உதாரணங்களோடு நாம் ஆய்வு செய்வோம்.
2. முழு குர்ஆனைப் போன்ற ஒன்றையோ அல்லது குர்ஆனில் பத்து அத்தியாயங்களை போன்றவற்றையோ அல்லது ஒரே ஒரு அத்தியாயத்தைப் போன்றோ கொண்டு வருமாறு பணித்தல்.
இஸ்லாத்தை எதிர்த்து வந்த அரபிகளில் ஒரு சிலர் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வேதமல்ல. மாறாக அண்ணல் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தி வந்தனர். அவ்வாறு குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விடும் விதமாக, அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் கீழக்கண்ட வசனத்தை இறக்கியருளினான்:
'இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும்.'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்லாயீல் - 88வது வசனம்.)
குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விட்ட அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம், கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் சவாலை இன்னும் எளிதாக்குகிறது.
அல்லது 'இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?. '(அப்படியானால்) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள்- நீங்கள் உண்மையாளராக இருந்தால்.! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்', என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுது - 13 வது வசனம்.)
குற்றம் சுமத்திய அரபிகளுக்கு, அருள்மறை குர்ஆன் கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் தனது சவாலை மேலும் எளிதாக்குகிறது.
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப்போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று. (அல்-குர்ஆன் அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸ் - 38 வது வசனம்.)
இன்னும், ((முஹம்மது (ஸல் என்ற)) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.' 'அப்படி நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் - 23 - 24 வது வசனங்கள்.)
இவ்வாறு அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தாலா தனது சவாலை சிறிது சிறிதாக எளிதாக்குகிறான். அருள்மறை குர்ஆன் முதலில் அருள்மறை பற்றி குற்றம் சுமத்திய அரபிகளுக்கு - குர்ஆனைப் போன்று வேறொரு வேதத்தை கொண்டு வருமாறு பணிக்கிறது. பின்பு குர்ஆனில் உள்ளது போன்று பத்து அத்தியாயங்களை கொண்டு வருமாறு பணிக்கிறது. கடைசியாக குர்ஆனில் உள்ளது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் என்று பணிக்கிறது. இவ்வாறு கொண்டு வருவதற்கு கட்டளையிட்டதன் மூலம் - அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது வசனங்கள் அதற்கு முன்புள்ள முன்று வசனங்களான 17:88, 11:13, 10:38 ஆகிய வசனங்களோடு முரண்படவி;ல்லை. இரண்டு கருத்துக்கள் அல்லது செயல்கள் ஒன்றுக்கொன்று மாறுபடும் நிலைக்கு - (அதாவது இரண்டு செயல்கள் அல்லது கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்பட முடியாத நிலைக்கு) - முரண்பாடு என்று பொருள்.
அருள்மறை குர்ஆனின் பதினேழாவது அத்தியாயத்தின் 88 வது வசனம் மாற்றப்பட்டு விட்டாலும், அந்த வசனம் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தையாக - அது சொல்லும் பொருளுக்கு விளக்கமாக -இன்றும் நிலைபெற்றுள்ளது. அந்த வசனத்தின் மூலம் அருள்மறை குர்ஆன் விடுத்த சவால் இன்றைக்கும் நிலைபெற்று நிற்கிறது. அதபோலவே அதற்கு பின்னால் உள்ள வசனங்களான 11:13 மற்றும் 10:38 போன்ற வசனங்களும் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளாக, அவைகள் சொல்லும் பொருளுக்கு விளக்கமாக நிலைபெற்று நிற்கின்றன. எந்த வசனத்தின் பொருளும் எந்த வசனத்தின் பொருளோடும் முரண்படாமல் - அவைகள் சொல்லக் கூடிய பொருளுக்கு உரிய நிலையில் நிலைபெற்று நிற்கின்றன. கடைசியில் சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் விடப்பட்ட சவாலானது, முந்தைய வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலைவிட எளிதானது. இவ்வாறு கடைசி வசனத்தின் மூலம் விடப்பட்ட எளிதான சவாலே இன்னும் நிறைவேற்றப்படாத போது, முந்தைய மூன்று வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலை நிறைவேற்றுவது என்கிற செயலுக்கு இடமில்லை.
உதாரணத்திற்கு - படிப்பில் மந்தமாக உள்ள ஒரு மாணவனைப் பார்த்து - அவன் பத்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மாணவரைப் பார்த்து அவர் ஐந்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். பின்பு அதே மாணவரைப் பார்த்து அவர் முதலாம் வகுப்பில் கூடத் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். இறுதியில் அவர் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுரியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாணவன் பள்ளியில் சேர வேண்டுமெனில் முதலில் பாலர் பள்ளியில் தேற வேண்டும். நான் கடைசியாக என்ன சொன்னேன் எனில் - மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்று சொன்னேன். நான் மேலே சொன்ன நான்கு வாக்குகளில் எதுவும் - ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் சொன்ன மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்கிற வாக்கு மாத்திரம் மேற்படி மாணவனின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள போதுமானதாகும். பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுதியில்லாத மாணவன் - முதலாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் தேர்வு பெற தகுதியுள்ளவன் என்கிற கருத்துக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
3. வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல்.
அருள்மறை குர்ஆனில் மேற்படி வசனங்களுக்கு மேலும் ஓர் உதாரணம் வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல் சம்பந்தமான வசனங்கள் ஆகும். கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 219 வது வசனம் குடிபோதையை தடைசெய்வது பற்றி இறங்கிய முதல் வசனமாகும்.
'(நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கின்றது: மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.'(அல்குர்ஆன் 2:219)
குடி போதையை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 43வது வசனமாகும்:
'நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்.'(அல்குர்ஆன் 4:43)
குடி போதையை தடை செய்வது பற்றி கடைசியாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனமாகும்:
'நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத் தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.'
அருள்மறை குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின்பு, அவர்கள் உயிரோடு வாழ்ந்திருந்த காலமான இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது. அவர்கள் காலத்தில் சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் திடீரென- எதிர்பாராத விதத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், கலகம் அல்லது குழப்பம் விளைவிக்க காரணமாக அமையலாம். எனவே சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது
மதுபானம் அருந்துவதை தடை செய்யும் வசனங்கள் மூன்று நிலைகளில் கொண்டு வரப்பட்டது. முதலாவது வசனம் மதுபான போதையில் பெரும் பாவமும், சில பயன்களும் உண்டு. ஆனால் பாவமானது பலனைவிட அதிகமாகும் என்று உணர்த்துகிறது. மதுபானம் அருந்துவதை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறங்கிய வசனம், போதையோடு இருக்கும் நிலையில் தொழுகையை மேற்கொள்ளாதீர்கள் என்று வலியுறுத்துகிறது. தொழும் காலங்களில் - போதையில் இருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வசனம், தொழாத நிலையில் போதையில் இருக்கலாமா - கூடாதா என்பது பற்றி குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. போதையில் இருக்கலாமா? இருக்கக் கூடாதா? என்பது பற்றி குர்ஆன் குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. தொழாத நேரங்களில் போதையில் இருக்கலாம் என்று குர்ஆன் குறிப்பிட்டு இருந்தால், அது சொன்ன முந்தைய வசனத்தோடு கண்டிப்பாக முரண்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அருள்மறை குர்ஆனை இறக்கியருளி இருக்கிறான். எனவேதான் அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை. கடைசியாக எல்லா நேரங்களிலும் போதையை தடை செய்யும் வசனம் - அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வசனத்தின் மூலம் இறக்கியருளப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டால், சமகாலத்தில் குறிப்பிட்ட மூன்று வசனங்களையும் நாம் பின்பற்ற முடியாமல் போயிருக்கும். ஒரு முஸ்லிம் அருள்மறை குர்ஆனின் அனைத்து வசனங்களையும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பதால் மேற்குறிப்பிட்ட வசனங்களில் கடைசியாக இறக்கியருளப்பட்ட வசனமான ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனத்தை பின்பற்ற வேண்டும். அதே சமயம் அதற்கு முன்னால் இறக்கியருளப்பட்ட இரண்டு வசனங்களையும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
உதாரணத்திற்கு நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்று சொல்கிறேன். பின்பு நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். கடைசியாக நான் சொல்கிறேன் நான் அமெரிக்காவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் எதுவும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. மாறாக எனது ஒவ்வொரு கூற்றும் அதிகமான விபரங்களைத்தான் தருகின்றன. எனது மூன்றாவது கூற்று முந்தைய எனது இரண்டு கூற்றுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக நான் கடைசியாக சொன்ன, நான் அமெரிக்கா சென்றதில்லை என்ற எனது கூற்று எனது முந்தைய இரண்டு கூற்றுக்களான நான் லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்பதையும் நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்பதையும் உள்ளடக்கியுள்ளது.
அதுபோலவே, எல்லா நேரங்களிலும் போதiயுடன் இருப்பது தடை செய்யப் பட்டதற்கான வசனம் இறங்கியவுடன், தொழுகை நேரத்தில் போதையுடன் இருப்பதுவும் தானாகவே தடை செய்யப் பட்டுவிட்டது. தவிர போதையுடன் இருப்பவர்களுக்கு உண்டான 'போதையுடன் இருப்பதில் நன்மையை விட தீமையே அதிகம்' - என்கிற செய்தியும் இன்று வரை அழியாத உண்மையாக விளங்கி வருகிறது.
4. அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை.
மேலே சுட்டிக் காட்டப்ட்ட வசனங்களில் 'விட்டொழிக்கும் விதி'யை நடைமுறை படுத்தவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. ஏனெனில் மேலே சுட்டிக் காட்டப்பட்ட வசனங்கள் மூன்றையும் ஏக காலத்தில் ஒன்றாக பின்பற்றி நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது.
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதம் என்பதால் - அதில் முரண்பாடுகளை காணமுடியாது. மேற்படி கருத்துக்கு ஆதாரமாக அருள் மறை குர்ஆனின் நான்காவது அத்தியாம் ஸுரத்துல் நிஷாவின் 82 வது வசனம் அமைந்துள்ளதை காணலாம்:
'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?. (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்' இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.'. (அல்குர்ஆன் 4:82)

கேள்வி எண்: 5
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.
பதில்:
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.
2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.
3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'
4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.
5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.
6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.
7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.
8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.
9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)
10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.
'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.
12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.
13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.
***********************************************************************************************************************************
கேள்வி எண்: 6
முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில்
உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் 'மத்திய கிழக்கு நாடுகளின்' கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; 'அடிப்படைவாதம்' பற்றியும் - 'தீவிரவாதம்' பற்றியும் நாம் ஆராய்வோம்.
1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.
2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் பூசக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும். கொள்ளையடிக்கும் - சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.
3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.
இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.
4. 'அடிப்படைவாதத்திற்கு' டிக்ஷ்னரி தரும் விளக்கம்:
அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் 'பாதுகாக்கும் கொள்கையை' (Pசழவநளவயnளைஅ) அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். 'கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்' என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.
அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் 'மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்' என்பதாகும்.
இன்றைக்கு ஒரு மனிதன் 'அடிப்படைவாதம்' என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.
5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும். சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் - அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.
6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - 'பயங்கரவாதிகள்' என்றும் 'விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.
வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்று ஒரு தரப்பினராலும் - 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று அழைத்தனர்.
எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.
7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
'இஸ்லாம்' என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

கேள்வி எண்: 7.
கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?
பதில்:
சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.
1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.
சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.
2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம்இ'முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.' என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' எனவும்
அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.
3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.
5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.
6. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.
இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.
இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'.
மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'.
மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'
இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.
7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.
8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.
பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.
10. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.
ஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.
11. கால்நடைகள் பெருகும்:
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.'

கேள்வி எண் - 8.
இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.
பதில்:
'ஸபிஹா' என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் - மேற்படி பொருள் குறித்து - ஒரு சீக்கியருக்கும் - ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.
சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் - நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது - அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு - கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் - நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து - சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.
மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.
மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் - ''ஸபிஹா' என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.
1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
அரபிமொழியில் 'ஸக்காத்' என்றால் 'தூய்மை' என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து 'ஸக்கய்தும்' (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு - மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B. 'ஸபிஹா' என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு - கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் - அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் - இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் - இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு - இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
D. கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே.
கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீ;ண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் - வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது - கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் - உடலில் உள்ள சதைப்பாகங்கள் - இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் - துள்ளுவதாகவும் - துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

கேள்வி எண் - 9.
மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?
பதில்:
1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.
மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் - அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.
2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் - கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.
'(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸுரத்துல் அஃராப் - 157வது வசனம்)
'மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸுரத்துல் ஹஷ்ர் - 7வது வசனம்)
சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.
3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி - ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.
அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.
ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்
இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்
ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.
_____________________________________________________________________________________________
கேள்வி எண் 10.
குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் - லாம் - மீம் - எனவும் - ஹாமீம் எனவும் - யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.
பதில் :
அலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.
A. அருள்மறையின் கீழ்க்காணும் மூன்று அத்தியாயங்கள் ஒரே ஒரு எழுத்தினை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் 38 ஸுரத்து ஸாத் - ஸாத் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
ii. அத்தியாயம் 50 ஸுரத்துல் ஃகாஃப் - ஃகாஃப் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
iii. அத்தியாயம் 68 ஸுரத்துல் கலம் - நூன் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
டீ. அருள்மறையின் கீழ்க்காணும் பத்து அத்தியாயங்கள் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் 20 ஸுரத்துத் தாஹா 'தா - ஹா' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
ii. அத்தியாயம் 27 ஸுரத்துன் நம்ல் 'தா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
iii. அத்தியாயம் 36 ஸுரத்துல் யாஸீன் 'யா - ஸீன்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
iஎ. அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின்
எ. அத்தியாயம் 41 ஸுரத்து ஹாமீம் ஸஜ்தா
எi. அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்ஷுறா
எii. அத்தியாயம் 43 ஸுரத்துல் அஜ் ஜுக்ருஃப்
எiii. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான்
iஒ. அத்தியாயம் 45 ஸுரத்துல் ஜாஸியா
ஒ. அத்தியாயம் 46 ஸுரத்துல் அஹ்காஃப்
மேலே குறிப்பிட்டுள்ள அருள்மறையின் பத்து அத்தியாயங்களும் 'ஹா - மீம்' என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
B அருள்மறையின் கீழ்க்காணும் பதினான்கு அத்தியாயங்கள் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
i. அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகரா
ii. அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல இம்ரான்
iii. அத்தியாயம் இருபத்து ஒன்பது ஸுரத்துல் அன்கபூத்
iஎ. அத்தியாயம் முப்பது ஸுரத்துல் ரூம்
எ. அத்தியாயம் முப்பத்து ஒன்று ஸுரத்துல் லுக்மான்
எi. அத்தியாயம் முப்பத்து இரண்டு ஸுரத்துல் ஸஜ்தா ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
எii. அத்தியாயம் பத்து ஸுரத்துல் யூனுஸ்
எiii. அத்தியாயம் பதினொன்று ஸுரத்துல் ஹுத்
iஒ. அத்தியாயம் பன்னிரெண்டு ஸுரத்துல் யூஸுப்
ஒ. அத்தியாயம் பதின்மூன்று ஸுரத்துல் ராத்
ஒi. அத்தியாயம் பதின்நான்கு ஸுரத்துல் இப்றாஹிம்
ஒii. அத்தியாயம் பதினைந்து ஸுரத்துல் ஹிஜ்ர் ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் - லாம் - ரா என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
ஒiii. அத்தியாயம் இருபத்து ஆறு ஸுரத்துல் அஸ்ஸுரா
ஒiஎ. அத்தியாயம் இருபத்து எட்டு ஸுரத்துல் கஸஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களும் தா - ஸீன் - மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
C அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
அத்தியாயம் ஏழு ஸுரத்துல் அஃராப் அலிஃப் - லாம் - மீம் - ஸாத் என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
அத்தியாயம் எட்டு ஸுரத்துல் அன்ஃபால் அலிஃப் - லாம் - மீம் - ரா - என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
D அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
அத்தியாயம் 19 ஸுரத்துல் மர்யம் காஃப் - ஹா- யா- அய்ன்-ஸாத் - என்னும் ஐந்து எழுத்துக்களை துவங்குகின்றன.
அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்-ஷுறா- ஹா- மீம் - அய்ன் -ஸீன் - காஃப் - என்னும் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இந்த ஐந்து எழுத்துக்களும் அத்தியாயத்தின் இரண்டு வசனங்களான தொடர்ந்து வருகின்றன. அதாவது ஹா- மீம் என்னும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாகவும், அதனைத் அடுத்து அய்ன் -ஸீன் - காஃப் -என்னும் மூன்று எழுத்துக்கள் இரண்டாவது வசனமாகவும் தொடர்கின்றன.
2. சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான விளக்கம்:
சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கான அர்த்தமும் நோக்கமும் தெளிவில்லாமல் இருந்தாலும், மேற்படி அருள்மறையில் காணப்படும் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு வௌ;வேறான பல விளக்கங்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மார்க்க அறிஞர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
i. மேற்படி எழுத்துக்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள சில வசனங்களுக்கு உண்டான சுருக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்கு அலிஃப் - லாம் - மீம் என்பதற்கு 'அன-அல்லாஹு-ஆலம்' என்பதின் முதல் எழுத்துக்கள் என்றும், 'நூன்' என்பதற்கு 'நூர்' (ஒளி) என்றும் பொருள் கொள்ளலாம் எனவும்,
ii. மேற்படி எழுத்துக்கள் சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அல்ல. மாறாக அல்லாஹ்வின் பெயர்கள் அல்லது அவனது அடையாளங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும்,
iii. மேற்படி எழுத்துக்கள் ராகத்துடன் உச்சரிப்பதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும்,
iஎ. அரபு எழுத்துக்களில் சிலவற்றுக்கு எண் மதிப்பு உள்ளதைப்போன்று, இந்த எழுத்துக்களுக்கும் முக்கியமான எண் மதிப்புகள் எதுவும் இருக்கக் கூடும் எனவும்,
எ. இந்த எழுத்துக்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக (பின்னர் இறைவசனத்தை கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக) இருக்கலாம் எனவும்,
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே உள்ளன.
3. அருள்மறையின் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான சிறந்த விளக்கம்:
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே இருந்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான இப்னு-கதீர் அவர்களின் விளக்கமும், ஷமக்ஸாரி, மற்றும் இப்னு-தைம்மியா ஆகியோர்களால் சரிகாணப்பட்ட விளக்கங்களும் பின்வருமாறு:
இயற்கையில் காணப்படும் சில அடிப்படை மூலக்கூறுகளால் ஆனது மனித உடல் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். களிமண்ணும், மண்ணும் இயற்கையில் உள்ள அடிப்படை மூலக்கூறுகளில் உள்ளதாகும். இருப்பினும் மனித உடல் மண்ணால் படைக்கப்பட்டது என்பதை எண்ணும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.
மனித உடலின் இயற்கையான மூலக்கூறுகளான மண்ணையும், களிமண்ணையும்;, தண்ணீரையும் நாம் எல்லோரும் எளிதில் பெறக்கூடிய நிலையில்தான் இருந்தாலும், மேற்படி இயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு - மனித உடலை படைக்க நம்மால் முடியாது. மனிதன் இன்ன மூலக்கூறுகளை கொண்டுதான் படைக்கப்பட்டான் என்பதை நாம் நன்றாக அறிந்திருந்தும் படைப்பின் ரகசியம் பற்றி நாம் எதுவும் அறியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.
அதேபோன்று இறைத்தன்மை வாய்ந்த குர்ஆனை மறுப்பவர்களுக்கு - தன்னைப் பற்றி அறிவிக்கிறது. இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆன் அரபி மொழியிலேயே உள்ளது என்பது பற்றி பெருமை கொண்டிருக்கும் அரேபியர்களுக்கு தன்னைப் பற்றி அறிவிக்கிறது. அரேபியர்கள் அடிக்கடி உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களை கொண்டுதான் அருள்மறை குர்ஆன் அமைந்துள்ளது என்பதை அரேபியர்களுக்கு அறிவிக்கிறது.
அரேபியர்கள் தங்களது மொழியைப் பற்றி பெருமை கொள்ளக் கூடியவர்கள். அருள்மறை குர்ஆன் இறக்கியருளப்பட்டபோது, அரபு மொழி - புகழின் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். ஆலிஃப் - லாம் - மீம், யா - ஸீன், ஹா-மீம் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கி இறக்கியருளப்பட்ட குர்ஆன் மனித குலத்திற்கு அறை கூவல் விட்டது. அருள்மறை குர்ஆனின் இறதை;தன்மையில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பின், இது போன்று ஒரு நேர்த்தியான, அழகான அத்தியாயத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் என்று அருள்மறை குர்ஆன் மனித குலத்திற்கு சவால் விட்டது.
ஆரம்பத்தில் அருள்மறை குர்ஆன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்குமாறு சவால் விட்டது. மனிதர்களும் - ஜின்களும் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டாலும் - அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்று சவால் விடுகிறது. இவ்வாறான சவால் அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் - ஸுரத்துல் பனீ - இஸ்ராயீலின் 88வது வசனத்திலும், 52வது அத்தியாயம் ஸுரத்துத் தூரின் 34வது வசனத்திலும் காணலாம்.
பின்னர் அருள்மறை குர்ஆன் மேற்படி சவாலை மீண்டும் மனிதர்களிடம் வைக்கிறது. அருள்மறை குர்ஆனின் 11வது அத்தியாயம் ஸுரத்துல் ஹுதின் 13வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று பத்து வசனங்களையாவது கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது. அருள்மறை குர்ஆனின் 10வது அத்தியாயம் ஸுரத்துல் யூனுஸின் 38வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள் என்று மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இறுதியாக அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது அத்தியாயத்தின் மூலமாக மேற்படி சவாலை இன்னும் எளிதாக்குகிறது:
இன்னும், (முஹம்மது (ஸல் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் - 23 - 24 வது வசனங்கள்.)
இரண்டு கலைஞர்களின் திறமையை மதிப்பிட வேண்டுமெனில், கலைஞர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான பொருளைச் செய்யச் சொல்லி, ஒரே விதமான மூலப் பொருள்களை வழங்க வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் இரண்டு பேரும் தையற்கலைஞர்கள் எனில், அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான துணியைக் கொடுக்க வேண்டும். அதபோலவே அரபி மொழியின் மூலப் பொருள் எதுவெனில் அலிஃப் - லாம் - மீம் - யா - ஸீன் போன்ற அரபி எழுத்துக்கள் ஆகும். இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆனின் மொழி உண்மையையே பேசும். ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். அரபியர்கள் எந்த மொழியயைப் பற்றி பெருமை கொண்டிருந்தார்களோ அதே மொழிதான் அருள்மறை குர்ஆன் இறக்கப்பட்ட மொழியுமாகும்.
அரபியர்கள் தங்களது சொல்லாட்சி திறனுக்கும், நாவன்மைக்கும், அர்த்தமுள்ள உச்சரிப்புக்கும் பெயர் போனவர்கள். எப்படி மனித உடலில் உள்ள மூலக் கூறுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிவோமோ - அந்த மூலக் கூறுகளை நாம் எவ்வாறு பெறவும் முடியுமோ - அதுபோல -அருள்மறை குர்ஆனின் சுருக்கப்பட்ட அலிஃப் - லாம் - மீம் போன்ற எழுத்துக்களை அரபியர்கள் அனைவரும் அறிவார்கள்;. அந்த எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளையும் உருவாக்குவார்கள்.
மனித உடலில் என்னென்ன மூலக் கூறுகள் உள்ளன என்று நாம் அறிந்திருந்தாலும் மனித உடலை எவ்வாறு நம்மால் உருவாக்க முடியாதோ - அதுபோல அருள்மறை குர்ஆனில் உள்ள எழுத்துக்களை அரபியர்கள் அறிந்து வதை;திருந்தாலும் - அருள்மறை குர்ஆன் பயன்படுத்தவது போன்று சொற் பிரயோகங்களை அவர்களால் பயன் படுத்த முடியாது. இவ்வாறு அருள்மறை குர்ஆன் தன்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்கிறது.
4. ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கு பிறகும்; அருள்மறை குர்ஆன் தனது இறைத்தன்மையை எடுத்து வைக்கிறது.
எனவேதான் ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அடங்கிய வசனம் முடிந்ததும் அருள்மறை குர்ஆன் தனது தனித் தன்மையை பற்றி எடுத்து உரைக்கிறது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் முதல் இரண்டு வசனங்கள்:
'அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் - 2: 1-2).
______________________________________________________________________________________________
கேள்வி எண்: 11
'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.
பதில்:
1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
'அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.
'அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்'.(அல்குர்ஆன் 71:20)
மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்..'(அல்குர்ஆன் 20:23)
பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் 'ஆரம'; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் - சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது - முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் - பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.
2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் - மற்ற இடங்களிலும் பரப்பலாம்.
பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் - பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து - ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் - மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக விரிப்புகள் - நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.
3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:
அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.
'இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.' என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.
அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?'.
பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
'ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.'
சுற்றுப்புற - சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.
4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:
அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
'இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான.;'.
மேற்படி வசனத்தில் 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை 'துஹ்யா' என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி 'துஹ்யா' என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.
இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.

கேள்வி எண்: 12.
அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.
பதில்:
1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்:
தாயின் வயிற்றில் உள்ள கரு ஆணா அல்லது பெண்ணா என்பதை பற்றி மாத்திரம் அறிந்தவன்தான் அல்லாஹ் என்று பலர் நம்பியுள்ளனர். ஆனால் அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸுரத்துல் லுக்மானின் 34வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.
'நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது: அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்..!'
மேற்படி வசனத்தில் உள்ள செய்தியைப் போன்று அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃது வின் 8வது வசனம் கீ;ழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும், அல்லாஹ் நன்கறிவான்: ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.'.
2. 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
3. அருள்மறை குர்ஆனில் பால் (Sex) என்ற வார்த்தை குறிப்பிடப் படவில்லை.
அருள்மறை குர்ஆனை மொழியாக்கம் செய்தவர்களும், அருள்மறை குர்ஆனுக்கு விளக்கமளித்தவர்களும் - தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்று தவறான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அருள்மறை குர்ஆனை நீங்கள் படித்துப் பார்த்தால் - பால் (Sex) என்கிற வார்த்தைக்குச் நிகரான அரபு வார்த்தை அதில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மாறாக தாயின் கருவில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்கிற கருத்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.
4. அல்லாஹ்வைத் தவிர, வேறு எவரும் கருவில் இருக்கும் குழந்தையின் தன்மையை முடிவு செய்ய முடியாது.
மேற்படி வசனம் குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பதை மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக கருவில் இருக்கும் குழந்தையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது தாயின் கருவில் உள்ள குழந்தை எவ்வாறு இருக்கும்?, என்பதையும், அந்த குழந்தையின் தன்மை என்ன என்பதையும், கருவில் இருக்கும் குழந்தை அதனது பெற்றோர்களுக்கு அருட்கொடையாக இருக்குமா? அல்லது சாபக்கேடாக இருக்குமா? கருவில் இருக்கும் குழந்தை சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது தீமையாக அமையுமா? என்பதையும், குழந்தை நல்லதா? கெட்டதா என்பதையும், குழந்தை சொர்க்கத்திற்கு செல்லுமா?. அல்லது நரகத்திற்குச் செல்லுமா? என்பன போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதே மேற்படி வசனத்தின் பொருளாகும். முற்றிலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை வைத்திருக்கும் எந்த ஒரு அறிவியல் அறிஞரால் மேற்படி விபரங்களை எல்லாம் நிச்சயமாகச் சொல்ல முடியும்?.
___________________________________________________________________________________________
கேள்வி எண்: 13
குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் 'ஹூர்' என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.
பதில்:
1. 'ஹூர்' பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.
அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.'.
அத்தியாயம் 52 ஸுரத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.'.
அத்தியாயம் 55 ஸூரத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.'.
அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
'(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்'.
2. 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனை மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்பாளர்கள் - குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று மொழியாக்கம் செய்துள்ளனர். 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு 'அழகிய கன்னியர்' என்று பொருள் கொண்டால் - அது ஆண்களுக்கு மட்டும்தான் என்று ஆகிவிடும். அப்படியெனில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்?.
3. 'ஹூர்' என்ற அரபி வார்த்தையின் பொருள்.
'ஹூர்' என்ற அரபி வார்த்தை 'அஹ்வார்' என்ற அரபிவார்த்தைக்கும் (ஆண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) 'ஹவ்ரா' என்கிற அரபி வார்த்தைக்கும் (பெண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மையான (Plural) வார்த்தை ஆகும். குறிப்பாக சொர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களை உடைய ஆண்பாலரையோ அல்லது பெண் பாலரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவர்.
அருள்மறை குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில் நீங்கள் 'முத்தஹ்ரதுன்' தூய்மையான மற்றும் புனிதமான 'அஸ்வாஜ்' - இணை, அல்லது துணை அல்லது ஜோடியினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகிறது. 'முத்தஹ்ரதுன்' என்கிற அரபி வார்த்தைக்கு தூய்மை மற்றும் புனிதம் என்று பொருள் கொள்ளலாம்.
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸூரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் பொதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)
அதே போன்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)
மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹூர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹூர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.
4. பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள்.
அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

கேள்வி எண் 14.
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
பதில்:
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)
மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (inWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

கேள்வி எண்: 15
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
பதில்:
மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.
அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:
அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:
'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)
மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:
பைபிளின் 20வது அத்தியாயம் Proverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.
மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:
மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் - போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.
உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.
குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் 'கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே!'
குடிப்பழக்கம் உள்ள பலரும் - மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை 'கௌரவ குடிகாரர்கள்' என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் 'கௌரவ குடிகாரரராகத்தான்' ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் - ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை - நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.
ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து - பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் - அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.
உதாரணத்திற்கு ஒரு 'கௌரவ குடிகாரர்' தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் - பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:
'தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
'அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அதிகமோ - குறைவோ இஸ்லாத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.
1. மதுபானம் தயாரிப்பவன் -
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்
3. மதுபானங்களை குடிப்பவன் --
4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன்
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
9. மதுபானங்களை வாங்குபவன்
10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்
ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.'
என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் - மூன்றாம் பாகத்தில் - முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் - அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் - நோய்கள் - அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் - குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.
1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
2. மனித உடலின் இரப்பை - தலை - கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
4. இரத்த அழுத்தநோய் - மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
5. வாதம் - கைகால் முடக்கம் - வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் - நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
7. நினைவிழத்தல் - மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.
8. தோல் வெடித்தல் - தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
9. கை - கால் பதற்றம் - உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.
10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.
11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.
12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.
இவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.
மது பழக்கம் ஒரு தீய நோய்.
மது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.
மதுப்பழக்கம் ஒரு தீய நோய்
புட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்
தினசரி செய்தித் தாள்களில் - வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்
உரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்
நெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்
குடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்
எந்தவித நோய் எச்சரிக்கையோ - அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால், மதுபானம் என்ற தீய நோயே. என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் - மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.
மதுபானம் அருந்துவது ஒரு நோய் என்று சொல்வதைவிட அதை ஷைத்தானின் ஊசலாட்டம் என்பதே பொருத்தமாயிருக்கும்:
அல்லாஹ் அருளிய அருள்மறை குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். இஸலாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும். ஐஷத்தானின் வேலைகள் அனைத்தும் - மனிதனை அவன் செல்லும் சீரான பாதையை விட்டும் தடுத்து கேடான பாதையில் அழைத்துச் செல்வதாகும். போதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் இயற்கைத் தன்மையை விட்டும் மாற்றமாக நடக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். போதை - மனிதன் இருக்க வேண்டிய நிலையை விட்டும் - அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
__________________________________________________________________________________________

____________________________________________________________________________________
கேள்வி எண் 16.
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.
பதில்:
கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.'
1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் - ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு - கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.
2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா - உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் - மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது - உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் - கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.
3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!
இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.
4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:
ஹஜ்ர் அல் - அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
'நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு - முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்'.
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் - நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் - எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?.
________________________________________________________________________
கேள்வி எண்: 17
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.
பதில்:
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:
1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.
2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஷா'.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஷா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.
இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.
இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார் - என்பதுதான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி எண்: 18
குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?.
பதில்:
அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.
மேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.
1. 'யவ்ம்' என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:
மேற்படி வசனங்களில் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் 'யவ்ம்' என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.
அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும்.(அல் குர்ஆன் - 22:47)
இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.
அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல் குர்ஆன் - 32:5)
மேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.
அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் - ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
ஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.(அல் குர்ஆன் 70:4)
மலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.
இரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.
அதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.
=================================================================================
கேள்வி எண்: 19
குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா?.
பதில்:
நபி ஆதம் (அலை) அவர்களும் - இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.(அல் குர்ஆன் 2:34)
மேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:
அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 - 31
அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61
அத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116
அத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 - 74.
ஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
அன்றியும், 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்' என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:... (அல் குர்ஆன் 18:50)
2. அரபிய முறையில் பின்பற்றுதல்:

மேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் - இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு 'தக்லீப்' என்று பெயர். மேற்படி முறைப்படி - பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியும் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
அதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது - இப்லீஸும் அங்கு இருந்ததால் - இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் - இப்லீஸும் - மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் - இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.
அடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் - இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.